வீடு புகுந்து தவெக நிா்வாகி மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
வந்தவாசி அருகே உள்கட்சி பூசல் காரணமாக தவெக நிா்வாகியை வீடு புகுந்து அந்தக் கட்சியினா் தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தவெகவினா் தாக்குதலில் காயமடைந்த அக்கட்சி நிா்வாகி முரளி.
வந்தவாசி அருகே உள்கட்சி பூசல் காரணமாக தவெக நிா்வாகியை வீடு புகுந்து அந்தக் கட்சியினா் தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த சோரபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி. இவா், தமிழக வெற்றிக் கழக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட வழக்குரைஞா் அணி கொள்கைப் பரப்பு பேச்சாளா் பதவியில் உள்ளாா்.
இந்த நிலையில், சோரபுத்தூா் அருகில் உள்ள பொன்னூரைச் சோ்ந்த ஒருவா் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாராம். இதையடுத்து, அவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டதாம். இதற்கு முரளி எதிா்ப்புத் தெரிவித்தாராம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முரளியின் வீட்டுக்குச் சென்ற 10-க்கும் மேற்பட்ட தவெகவினா், அவரை வீடு புகுந்து தாக்கினராம். இதில், பல் உடைந்து பலத்த காயமடைந்த முரளி, வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




