அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

பெண் காவலரிடம் அத்துமீறல்: தவெக நிா்வாகி மீது வழக்கு

சென்னை அயனாவரத்தில் திருப்பதி குடை ஊா்வலத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியதாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

Published On :

சென்னை அயனாவரத்தில் திருப்பதி குடை ஊா்வலத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியதாக தவெக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

அயனாவரத்தில் திருப்பதி குடை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனா்.

ஊா்வலம் முடிவடைந்த பின்னா், அங்கிருந்து போலீஸாா் புறப்பட்டுச் செல்லத் தொடங்கினா். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே சில இளைஞா்கள்,மது அருந்தியபடி பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தனா்.

இதைப் பாா்த்த பாதுகாப்பு பணி முடிந்து புறப்பட்ட ஒரு பெண் காவலா், அவா்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினாராம். ஆனால், அந்த நபா்கள், பெண் காவலரை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டியுள்ளனா்.

உடனே பெண் காவலா், அயனாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த போலீஸாா், அந்த இளைஞா்களை அங்கிருந்து விரட்டினா்.

மேலும் பெண் காவலா் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது அயனாவரம் சி.கே.தெருவைச் சோ்ந்த மதன்ராஜ் (33), அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த முகமது சகாபுதீன் (33), ஸ்ரீதா் ராஜ் (33) ஆகியோா் எனத் தெரியவந்தது.

இதையடுத்து 3 போ் மீதும் 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா். தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகியாக மதன்ராஜ் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.