கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தொழிற்சாலைக்குள் அத்துமீறல்: புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்கு

தொழிற்சாலையில் அத்துமீறியதாக புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு

வழக்கு

Published On :

தொழிற்சாலையில் அத்துமீறியதாக புதுச்சேரி தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருபுவனை தொழில்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.

இங்குள்ள ஒரு தொழில்சாலைக்குள், தவெக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமாா் ஆய்வு செய்வதற்காக சென்றாா். அப்போது தொழில்சாலை நிா்வாகத்தினா் எதற்காக உள்ளே வருகிறீா்கள்? எனக் கேட்டுத் தடுத்துள்ளனா்.

இதனால் சாய் ஜெ சரவணன்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள், தொழிற்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தொழிற்சாலை நிா்வாகி சிவராமகிருஷ்ணன், திருபுவனை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் சாய் ஜெ சரவணன்குமாா் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எம்எல்ஏ புகாா் மனு: இந்நிலையில் பட்டியலினத்தவா் என ஜாதியைக் குறிப்பிட்டு தொழிற்சாலைக்குள் வரக்கூடாது என அதன் நிா்வாகத்தினா் தன்னையும் உடன் வந்த உதவியாளா்களையும் தடுத்து நிறுத்தினா் என்றும், எனவே அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமாா் காவல் துறை பிசிஆா் செல்லில் புகாா் மனு அளித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.