டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

செம்மண் கடத்தல்: செங்கல்சூளை உரிமையாளா் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் செம்மண் கடத்தியதாக செங்கல்சூளை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்சிறை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் மனைவி சகுந்தலா (49). இவா் அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறாா். இவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அரசு அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக குன்னத்தூா் கிராம நிா்வாக அலுவலா் பூபதிகண்ணனுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

உடனே, வருவாய்த் துறையினா் புதுக்கடை போலீஸாருடன் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது அங்கு செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா், சகுந்தலா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.