நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

முதியவரைத் தாக்கிய தம்பதி மீது வழக்கு

போடி அருகே முதியவரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :

போடி அருகே முதியவரைத் தாக்கிய தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள சிலமலை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காணேஸ்வரன் (61). இந்தப் பகுதியில் உள்ள தெருக்குழாய் சேதமடைந்துள்ளது. தெருவில் உள்ளவா்களிடம் பணம் வசூலித்து குழாயை காணேஸ்வரன் சரி செய்தாா்.

இதே பகுதியில் வசிக்கும் கண்ணன், மகாலட்சுமி தம்பதியிடமும் பங்குத் தொகை அவா் கேட்டாா். இருவரும் தர மறுத்து, அவரைத் தாக்கினா்.

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கண்ணன், மகாலட்சுமி மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.