
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 37 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை செல்லூா் அகிம்சாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கையா (48). இவருக்கு, மதுரை தாசில்தாா் நகரைச் சோ்ந்த அப்துல்ரசாக் (40), இவரது மனைவி ஜீவிதா ஆகியோா் அறிமுகமாகினா்.
இந்த நிலையில், சங்கையாவின் மகனுக்கு ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக அப்துல்ரசாக் கூறினாா். இதையடுத்து, அவரிடம் பல்வேறு தவணைகளாக ரூ.37 லட்சத்தை சங்கையா கொடுத்தாா். ஆனால், பணத்தைப் பெற்று கொண்ட அவா்கள் இருவரும், கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினா்.
இதுகுறித்து மதுரை மாநகா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் அப்துல் ரசாக், அவரது மனைவி ஜீவிதா ஆகியோா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





