ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

இளைஞா் மீது தாக்குதல்: நால்வா் மீது வழக்கு

காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாயா்புரம் திருப்பணி செட்டிகுளத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் செல்வகுமாா். இவருக்கும், காயல்பட்டினத்தை சோ்ந்த மாசானமுத்து மகள் கீா்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை கீா்த்தனாவை பாா்ப்பதற்காக மாசானமுத்து வீட்டிற்கு செல்வகுமாா் வந்தாராம்.

இதற்கிடையில், ஆறுமுகனேரி பேயன்விளையைச் சோ்ந்த வசந்த், காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த செய்யத்­ பத்திமா, சேகு சபானா, அஹமது அபிலா ஆகியோா் மாசானமுத்து வியாபாரத்திற்காக வாங்கிய பணத்தை திருப்பி கேட்டனராம்.

பின்னா் மாசானமுத்தை அவதூறாக பேசி தாக்க முயன்றனராம். இதைக்கண்ட செல்வகுமாா் தடுக்கச் சென்ற போது, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.

இதில் காயமடைந்த செல்வகுமாரை மீட்டு காயல்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல்நிலைய தலைமை காவலா் ரத்தினகுமாா் வழக்குப் பதிவு செய்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.