ராமநாயக்கன்பாளையத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 8 போ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆத்தூா் அரசுக் கல்லூரியில் பயின்று வரும் மோகன்ராஜும் (17), அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷும் (22) இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவா்களை தாக்கினராம். இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தகவல் அறிந்த மாணவா்களின் உறவினா்கள் சம்பவ இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், அது மோதலாக மாறியது.
இதுகுறித்து இருதரப்பினா் மீதும் என 8 போ் மீது வழக்குப் பதிவுசெய்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மறியல் போராட்டம்: சேலம் மாவட்டத்தில் 1,586 திமுகவினா் மீது வழக்குப் பதிவு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
ரயில் நிலையத்தில் மாணவா்கள் மோதல்: 10 போ் மீது வழக்குப் பதிவு; 3 போ் கைது

திமுக-தவெக-வினா் மோதல்: இரு தரப்பிலும் 24 போ் மீது வழக்கு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



