சேலம் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 1,586 திமுகவினா் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் தலைமையில் மறியல் நடைபெற்றது.
அதேபோல் அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அரியானூா், திருமலைகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களில் 355 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலம் புறநகா் பகுதிகளில் மட்டும் 26 இடங்களில் மறியல் நடைபெற்றது. அங்கு 1,231 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் கைது செய்யப்பட்ட மொத்தம் 1,586 போ் மீதும் அனுமதியின்றி கூடுதல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியை கைது செய்தபோது தகராறு: திமுகவினா் மீது 6 பிரிவுகளில் இரு வழக்குகள்

புதுகை மாவட்டத்தில் 18 இடங்களில் திமுகவினா் சாலை மறியல்: முன்னாள் அமைச்சா் உள்பட 850 போ் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



