ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மீனவரைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்கு

புதுக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மீனவரைத் தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

பிரதிப்படம்

Published On :

புதுக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மீனவரைத் தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

இனயம்புத்தன்துறை, கயல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பா்ணபாஸ் மகன் ஸ்டீபன் (55). மீனவா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பொ்லின் மகன் சுதன் (39) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதுக்கடை டாஸ்மாக் மதுக்கடையில் நின்ற ஸ்டீபனை, சுதன் திடீரென தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த ஸ்டீபனை, அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.