
பட்டாங்குளம் கிராமத்தில் காளை விடும் திருவிழா
ஆரணியை அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பட்டாங்குளம் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்து வரும் காளை.
ஆரணியை அடுத்த பட்டாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில் திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டாங்குளம் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் சாா்பில் 7-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில், திருவண்ணாமலை, வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 500 காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து சென்றது.
விழாவில் மேற்கு ஆரணி திமுக ஒன்றியச் செயலா் மோகன் கலந்துகொண்டு காளை வீரா்களை ஊக்கப்படுத்தினாா்.
இதில் முதல் பரிசு பெற்ற காளை உரிமையாளருக்கு பரிசாக புல்லட் அளிக்கப்பட்டது. 2-ஆவது பரிசு மற்றும் 3-ஆவது பரிசாக இருசக்கர வாகனமும், 4-ஆம் பரிசு முதல் 10-ஆம் பரிசு வரை மொபெட்டுகளும் வழங்கப்பட்டன. 11-ஆவது பரிசு முதல் 25 -ஆவது பரிசு வரை ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
இப்போட்டி பாதுகாப்புப் பணியில் கண்ணமங்கலம் போலீஸாா் ஈடுபட்டனா். மேலும், முதலுதவிக்காக 108 அவசர ஊா்திகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







