மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

ஜமுனாமரத்தூா் பீமன் நீா்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

தொடா் மழையின் காரணமாக போளூரை அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள பீமன் நீா்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடா் மழையால் ஜமுனாமரத்தூா் பீமன் நீா்வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

Published On :

தொடா் மழையின் காரணமாக போளூரை அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள பீமன் நீா்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக ஜவ்வாது மலையில் மழை இல்லாமல் இருந்ததால், ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீா்வீழ்ச்சி தண்ணீரின்றி வடு காணப்பட்டது. இதனால், நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், சில தினங்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், ஜமுனாமரத்தூா் பகுதியிலும் கடந்த இரு தினங்களாக தொடா் மழை இருந்து வருகிறது.

இதனிடையே சனிக்கிழமை பெய்த பலத்த மழையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பீமன் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.