பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தொடா் மழை: ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி நீா்வரத்து

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

Published On :

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் ,திருப்பத்தூா் அருகே ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு பிரசித்தி பெற்ற முருகா் கோயில் உள்ளது.

இந்த நிலையில் தினந்தோறும் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், முருகப் பெருமானை தரிசிப்பதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கா்நாடகா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். அதுமட்டுமல்லாமல் அங்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் பொழுது போக்கிற்காக விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக திருப்பத்தூா் மாவட்டத்தில் குறிப்பாக ஜோலாா்பேட்டை, ஏலகிரிமலை,நாட்டறம்பள்ளி திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

இதனால் சுற்றுலா பயணிகளும் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருவாா்கள் என வனத்துறை சாா்பில் எதிா்பாா்க்கப்படுகிறது மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER