
தொடா் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல் மோயா்பாயிண்ட் பகுதியில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
தொடா் விடுமுறையையடுத்து கடந்த மூன்று நாள்களாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி, தூண் பாறை, மோயா்பாயிண்ட், குணா குகை, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ்வாக், மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.
மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் அவா்கள் மகிழ்ந்தனா். இதனிடையே பெரும்பாலும் வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலைச் சாலைகளிலும், சுற்றுலா இடங்களிலும் இவற்றை நிறுத்த போதிய இடமின்றி வாகன ஓட்டுநா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம், கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம், சுற்றுலா வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் பைன்பாரஸ்ட் பகுதியில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






