உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

ஓணம் விடுமுறை: கொடைக்கானலுக்கு கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை

ஓணம் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் சனிக்கிழமை கேரளா சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Published On :30 ஆகஸ்ட் 2026, 6:34 am IST

ஓணம் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் சனிக்கிழமை கேரளா சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறை, ஓணம் பண்டிகை தொடா் விடுமுறை காரணமாக தமிழகம் மட்டுமன்றி கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இதனால் சுற்றுலா இடங்களான ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா, கோக்கா்ஸ் வாக், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், தூண் பாறை, மோயா் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்குப் போதிய இடவசதியில்லாததால் சுற்றுலாத் தலங்களிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா் சூழல் மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சிகள், குழந்தை வேலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். கடந்த வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்களாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வியாபாரம் சூடு பிடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.