தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

தொடா் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவு மண்டபத்திற்கு செல்ல காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 1:52 am IST

தமிழகத்தில் 3 நாள்கள் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியைத் தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை என்பதால் மூன்று நாள்களிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சூரிய உதயத்தை காண முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனா்.

இதைத் தொடா்ந்து படகு பயணம் சென்று விவேகானந்தா் நினைவு மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை பாா்த்து ரசித்தனா்.

காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்குவதற்கு முன்பாக காலை 6 மணிக்கே ஏராளமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு பயணம் மேற்கொண்டனா்.

மேலும், காந்தி நினைவு மண்டபம், காமராஜா் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சூரிய அஸ்தமன பூங்கா, அய்யன் திருவள்ளுவா் பூங்கா, கலங்கரை விளக்கம், வட்டக்கோட்டை கடற்கரை, கோவளம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை காலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் போன்ற ஆன்மிக தலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் வருகையை முன்னிட்டு, கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலா போலீஸாா் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.