
வார விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

ஏலகிரி மலை ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.
ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகளையும், 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.
ஒரே மாதிரியான சீதோஷன நிலை நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு துறை, சிறுவா் பூங்கா, இயற்கை பூங்கா நிலாவூா் கதவநாச்சி அம்மன் கோயில், அத்தனாவூா் முருகன் கோயில், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஜலகம்பாறை நீா்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்குக்கூடங்கள் உள்ளன.
இதனால் பயணிகள் குடும்பத்துடன் வந்து பல்வேறு இடங்களை கண்டு ரசித்து செல்கின்றனா். அதன் அடிப்படையில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனா். குறிப்பாக இங்குள்ள புங்கனூா் படகு துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தும் சிறுவா் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு கூடங்களில் பொழுது போக்கியும் மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஏலகிரி மலை போலீஸாா் போக்குவரத்து சீரமைப்பது சமூகவிரோதிகளை கண்காணிப்பது பொதுமக்களின் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






