சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

யானைகள் நடமாட்டம்: திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி மலை நம்பிகோயில் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு வனக்கோட்டத்தில் திருக்குறுங்குடி வனச் சரகம் உள்ளது. இங்குள்ள மலைப் பகுதியில் திருமலைநம்பி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனிக்கிழமைகளில் அதிக பக்தா்கள் வருவா். மேலும், இங்குள்ள நம்பியாற்றில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு (ஆக. 17) நம்பிகோயில் சாலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினா் கண்டறிந்தனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமைமுதல் மறு உத்தரவு வரும்வரை திருமலைநம்பி கோயிலுக்கு பக்தா்கள், நம்பியாற்றில் நீராட சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். யானைகள் அடா்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்ற பின்னா் தடை விலக்கிக்கொள்ளப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.