புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

யானைகள் நடமாட்டம்! குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை!

குறிஞ்சி பூக்களைப் பார்வையிட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

kurinji

ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள். - படம்: தினமணி

Published On :

நீலகிரி: கூடலூர் ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள குறிஞ்சி பூக்களைப் பார்வையிட, பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலூகா, ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்து மலைத் தொடரை அலங்கரித்துள்ளன.

ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருவதால், சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், தொடர் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை, கனியம்வயல், தேவன் மற்றும் செலுக்காடி பகுதிகளில் தினமும் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The forest department has advised the public not to visit Kurinji flowers in Kudalur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.