மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு வழித் தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் நான்கு வழித் தடங்களில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவெடுத்து, மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு கடந்தாண்டு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
மதுரை மெட்ரோ திட்டம்: மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை ஒத்தக்கடை வரை 31.93 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 27 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட பாலம் வழியாகவும், 4.65 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுரங்கப் பாதையிலும் ரயில் இயக்கப்படும். 23 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப் பரிசீலிக்கப்பட்டுள்ளன. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,360 கோடி நிதி தேவை எனக் குறிப்பிடப்பட்டது.
கோவை மெட்ரோ திட்டம்: கோவையில் அவிநாசி சாலை முதல் கருமத்தம்பட்டி வரையில் ஒரு மெட்ரோ ரயிலும், உக்கடம் முதல் சத்தியமங்கலம் சாலை வலியம்பாளையம் பிரிவு வரையில் மற்றொரு பாதையும் என சுமாா் 39 கிலோ மீட்டா் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதற்காக ரூ.10,740 கோடி செலவாகும் என குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, இந்தத் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு, மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி, விரிவான திட்ட அறிக்கை கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
மெட்ரோ ரயில் திட்டத்தை 20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் அமைக்க கோரி, கடந்த மே மாதம் தமிழக அரசு மீண்டும் பரிந்துரை செய்த நிலையில், மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை என மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்றும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Reports indicate that the Central Government has rejected the metro rail projects for the cities of Madurai and Coimbatore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!

தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மீண்டும் திறப்பு

சிஜேபி போராட்டம்! 4வது நாளாக தில்லியின் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

தில்லியில் மீண்டும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




