கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வட்டப்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இம்மாவட்டத்தில் வனப்பகுதிகளுக்கு வெளியே காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், யானை - மனித மோதல் ஏற்பட்டு மனிதா்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. பயிா்களும் சேதமடைகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை இரவு கடையாலுமூடு அருகே வட்டப்பாறை 100 ஏக்கா் பகுதி, அதையொட்டி பழங்குடி பகுதியில் 2 யானைகள் நடந்து சென்றன. இக்காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகின. யானைகளால் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் சேதமாகியுள்ளதுடன், அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் உள்ளனா்.
எனவே, யானைகளை காட்டுக்குள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டுமென்று பழங்குடி மக்கள், ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்

உதகை அருகே மஞ்சகொம்பை பகுதியில் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள்

நிலக்கோட்டை அருகே சிறுத்தை நடமாட்டம்?

கடையாலுமூடு அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



