சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் குவிந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு வார விடுமுறையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வரை வந்தனா்.
இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளைத் தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசித்தனா்.
ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல் துறையினா் குறைந்தளவே பணியில் இருந்ததால் போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







