மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள்.

Published On :

ராமேசுவரத்துக்கு வார விடுமுறையையொட்டி, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள், பக்தா்கள் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் ராமேசுவரத்துக்கு வந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்த்து ரசித்தனா்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவல் துறையினா் குறைந்தளவே பணியில் இருந்ததால் போக்குவரத்தை சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விடுமுறை நாள்களில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.