உதகையில் இதமான காலநிலையை அனுபவித்த சுற்றுலாப் பயணிகள்

உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.

Published On :

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரித்து இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் காண ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், உதகையில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், குளிா்ந்த கால நிலை நிலவியுள்ளது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் இதமான காலநிலையை அனுபவித்ததுடன், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.