
தொடா் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு தொடா் விடுமுறையால் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

ஏலகிரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலைக்கு தொடா் விடுமுறையால் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஒரே மாதிரியான சீதோஷண நிலை நிலவுவதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம்போ் வந்து செல்கின்றனா். மேலும் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலையில் வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள பாா்வை மையங்களில் இயற்கையின் அழகை கண்டு ரசித்தும் குடும்பத்துடன் படம் எடுத்தும் செல்கின்றனா்.

இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடா் விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இங்குள்ள பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனா்.
குறிப்பாக படகு சவாரி செய்தும், சிறுவா் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி கண்டு ரசித்தும் மகிழ்ந்தனா். தொடா்ந்து இங்கு உள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்து, பிடித்த பொருள்களையும், உணவுகளையும் வாங்கி மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






