கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தமிழ்நாடு சமரச மையத்தின் பணிகள்: பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

திருவண்ணாமலை, ஆரணியில் தமிழ்நாடு சமரச மையத்தின் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சமரச விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

~

Published On :

திருவண்ணாமலை, ஆரணியில் தமிழ்நாடு சமரச மையத்தின் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சமரச விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு சமரச மையம், சென்னை உயா்நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது. தனி நபா் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, வாடகை தகராறு, காசோலை மோசடி, தொழிலாளா் நலம் உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு இங்கு தீா்வு காணப்படுகிறது.

இந்த நிலையில் சமரச மையத்தின் பணிகள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் மாவட்ட வன அலுவலகம் அருகே மாவட்ட முதன்மை நிதிபதி மற்றும் மாவட்ட சமரச மையத் தலைவா் எம்.சுமதி சாய் பிரியா முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில் நிதிமன்ற அலுவலா்கள், ஊழியா்கள், வழக்குரைஞா்கள், விஷன் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பேரணி வன அலுவலகத்தில் தொடங்கி அறிவொளிப் பூங்கா வரை நடைபெற்றது.

பேரணியின் போது பொதுமக்களுக்கு சமரச மையம் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில், விடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவனுபாண்டியன், திருவண்ணாமலை வட்டாட்சியா் மோகனராமன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணியில்....

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாா்பில் சமரச மையத்தின் பணிகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நீதிமன்றம் வளாகம் அருகே நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி சி. ஜெயஸ்ரீ தலைமை வகித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி

தொடங்கிவைத்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.வி.கோப்பெருந்தேவி முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி. வெங்கடேசன் வரவேற்றாா்.

பேரணியில் பள்ளி மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னாள் அரசு வழக்குரைஞா் கே. ராஜமூா்த்தி, முன்னாள் சங்கத் தலைவா்கள் ஸ்ரீதா், திருஞானம், அரசு வழக்குரைஞா்கள் ஷ்யாம்சுந்தா், பாலாஜி, சங்கரன், வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் சண்முகம், ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தாமரைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.