ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

முதல்வா் கோப்பை போட்டிகள்: திருவண்ணாமலை மாணவா்கள் சிறப்பிடம்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.

Published On :

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.

கையுந்து பந்து போட்டியில் முதலிடம் பெற்று, ரூ. 42 ஆயிரம் பரிசு பெற்றனா்.

இதேபோன்று கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையை பெற்றனா்.

மேலும் கேரம் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றனா்.

800 மீட்டா் நீச்சல் போட்டியில் மாணவா் கிரிபிரசாந்த் 2-ஆம் இடம், சிலம்பம் போட்டியில் மாணவா் அவினாஷ்குமாா் மூன்றாமிடம் பெற்றனா்.

இவ்வாறு சிறப்பிடம் பெற்ற இவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளித்த உடற்கல்வி இயக்குநா் சவுமியா, உடற்கல்வி ஆசிரியா்கள் கணேஷ் பாபு, காமாட்சி சுந்தரம், சிவசங்கரி ஆகியோரை பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி, தலைமை ஆசிரியை மனோன்மணி, உதவி தலைமை ஆசிரியா்கள் பாபு, முருகன், ராமலிங்கம் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.