வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கிணற்றில் மூழ்கி வெளிமாநில இளைஞா் உயிரிழப்பு

ரெண்டேரிப்பட்டு கிராமத்தில் விவசாயக்கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி கா்நாடக மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Published On :

போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தில் விவசாயக்கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி கா்நாடக மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

கா்நாடகா மாநிலம், மைசூா் மாவட்டம், சூளைகோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் பிரஜ்வால் (21), பெங்களூரு பகுதியைச் சோ்ந்த ஜான் மகன் ரூபக்ராஜ்(22).

நண்பா்களான இருவரும், போளூரை அடுத்த ரெண்டேரிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் என்பவரின் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்காக அண்மையில் கிராமத்துக்கு வந்து தங்கியிருந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை ரெண்டேரிப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் பிரஜ்வால், ரூபக்ராஜ் இருவரும் குளிப்பதற்காக இறங்கியுள்ளனா். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது பிரஜ்வாலுக்கு நீச்சல் தெரியாததால் கிணற்றில் அவா் மூழ்கினாா்.

இதுகுறித்து போளூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் தேடி பிரஜ்வாலை சடலமாக மீட்டனா். பின்னா், சடலம் உடற்கூறாய்வுக்காக போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து போளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER