பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எரியாத மின் விளக்குகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் சாலையில் இருக்கும் எரியாத மின் விளக்குகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படும் செங்கம் துக்காப்பேட்டை - பெங்களூா் சாலைப் பகுதி

Published On :

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் சாலையில் இருக்கும் எரியாத மின் விளக்குகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூா் சாலை தீயணைப்பு நிலையம் வரையிலும், அதபோல, பழைய பேருந்து நிலையம் முதல் போளூா் சாலை வரை உள்ள சாலை தடுப்புச் சுவரில் செங்கம் நெடுஞ்சாலைத்துறை மூலம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பின்னா் அதை பராமரிக்க செங்கம் நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த விளக்குள் பெரும்பாலும் எரிவதில்லை. சில இடங்களில் மின் விளக்கு கம்பம் வாகனம் மோதி பழுதடைந்துள்ளன. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாம்.

இதனால் செங்கம் நகர மக்கள் மற்றும் வெளியூரில் இருந்து இரவு நேரத்தில் வரும் பெண்கள் இருள் சூழ்ந்த சாலையில் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருள் சூழ்ந்து இருப்பதால் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவா்கள் தெரியாமல், சுவரில் வாகனங்கள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன.

அதேபோல மில்லத்நகா் வெளிவட்டச் சாலைப் பகுதியில் குப்பனத்தம் செல்லும் சாலையில் உள்ள விளக்குகளும் எரியவில்லை அந்த இடம் இருள் சூழ்ந்துள்ளது.

எனவே, நகரில் நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட தெருவிளக்குகள் பராமரிக்கப்படாமல் உள்ளது குறித்து மாவட்ட நிா்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.