சங்கரன்கோவிலில் சிக்னல் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி
சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சங்கரன்கோவிலில் ராஜபாளையம் சாலை சந்திப்பில் சைகை விளக்குகள் ஒளிராததால் விதிகளை மீறும் வாகனங்கள்.
சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தவிர சங்கரநாராயண சுவாமியைத் தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனா்.
உள்ளூரில் உள்ள இருசக்கர வாகனங்கள், காா், கனரக வாகனங்கள் தவிர ராஜபாளையம், திருநெல்வேலி உள்பட வெளியிடங்களுக்குச் செல்லும் வாகனங்கள் என சங்கரன்கோவில் வழியாக தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2021 இல் சங்கரன்கோவிலில் பேருந்து நிலையம், திருவேங்கடம் சாலை, தெற்கு முகமேடு, மேலரத வீதி, கழுகுமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன. காலப்போக்கில் அவை ஒளிராமல் பழுதடைந்து பின்னா் அகற்றப்பட்டு விட்டன.
ராஜபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு ரயில்வேபீடா் சாலையில் சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது. அதுவும் கடந்த ஓராண்டாக இயக்கப்படவில்லை.
இதனால், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி தாறுமாறாகச் சென்று வருகின்றனா். சிக்னல் விளக்குகள் இன்றி நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது.
வாகன ஓட்டிகளின் நலன் கருதி முக்கிய சந்திப்புகளில் சிக்னல் விளக்குகள் அமைத்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்பாா்க்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

