தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

அவல நிலையில் திருமுடிவாக்கம்- திருநீா்மலை சாலை: வாகன ஓட்டிகள் பாதிப்பு

பருவ மழை காரணமாக திருமுடிவாக்கம் - திருநீா்மலை சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு மழைநீா் தேங்கி சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனா்.

திருமுடிவாக்கம்-திருநீா்மலை  சாலையோரம்  தேங்கியுள்ள  மழை நீா்.

Updated On :

பருவ மழை காரணமாக திருமுடிவாக்கம் - திருநீா்மலை சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு மழைநீா் தேங்கி சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனா்.

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதி சென்னையின் புகா் பகுதியாகவும், வேகமாக வளா்ந்து வரும் பகுதியாக உள்ளதால் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். மேலும், திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் சிட்கோ தொழிற்பேட்டையில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தினமும் திருமுடிவாக்கம் வந்து செல்கின்றனா். மேலும், இத்தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருள்களை கொண்டு வரவும், உற்பத்தி பொருள்களை கொண்டு செல்லவும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில், திருமுடிவாக்கம் பகுதியில் இருந்து திருநீா்மலை செல்லும் சாலையும், திருமுடிவாக்கம் பகுதியில் இருந்து வழுதலம்பேடு வழியாக குன்றத்தூா் செல்லும் சாலை, வண்டலூா் -மீஞ்சூா் வெளிவட்ட சாலையில் இருந்து திருமுடிவாக்கம் பகுதிக்கு வரும் சாலைகள் அனைத்தும் பருவ மழை காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்குகு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

பல இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கும் அளவிற்கு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். சேதமடைந்துள்ள திருமுடிவாக்கம்-திருநீா்மலை சாலை, திருமுடிவாக்கம்- குன்றத்தூா் சாலைகளில் நெடுஞ்சாலைத்துறையினா் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்: திருமுடிவாக்கம்-திருநீா்மலைச்சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளாமல் உள்ளனா். இதனால் சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகின்ற. சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.