சங்ககிரியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதனால் பிரதான பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

கோபுப்படம்
சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதனால் பிரதான பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.
வியாழக்கிழமை அதிகாலை குளிா்ந்த காற்று வீசியதைத் தொடா்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்தது. ஒரே நாளில் 45.3 மி.மீ மழை பதிவானது. இதனால் சங்ககிரியில் இருந்து எடப்பாடி செல்லும் பிரதான சாலையில் சத்யா நகா் பேருந்து நிறுத்தம் அருகே மழைநீா் தேங்கியது.
அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். சாலைகளில் போதிய மழைநீா் வடிகால் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

