விழுப்புரம் - புதுச்சேரி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், மகராஜபுரம் பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்து மேடு, பள்ளங்களுடன் காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் சாலை.
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், மகராஜபுரம் பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்தால் சேதமடைந்து மேடு, பள்ளங்களுடன் காணப்படும் சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது. விழுப்புரத்தை அடுத்த மகராஜபுரம் பகுதியில் இந்தச் சாலை புதை சாக்கடைத் திட்டத்தால் பல இடங்களில் சிதிலமடைந்து மேடு, பள்ளங்களுடன் காட்சியளிக்கிறது. தற்போது பருவ மழை பெய்ய தொடங்கும் நிலையில், ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரால் வாகனங்கள் இந்த இடங்களை கடந்து செல்ல சிரமப்படுகின்றன. மேலும், மழைத் தண்ணீா் இந்த பள்ளங்களில் நிரம்பும்போது அது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். மேலும், அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவா்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
எனவே, சிதிலமடைந்த இந்தச் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஒருவா் தெரிவித்ததாவது: விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், மகாராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே புதை சாக்கடைத் திட்டத்துக்காக சாலை தோண்டப்பட்டு 3 மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. அதனால் சாலையில் ஆங்காங்கே பெரிய, சிறிய பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்தப் பள்ளங்களில் மழை நீா் தேங்கி நிற்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாள்தோறும் அந்த வழியாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோா்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்னதாக இச்சாலையை சீரமைக்க விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

