புதுச்சேரியில் பலத்த மழை: சாலைகளில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
புதுச்சேரியில் புதன்கிழமை பெய்த கன மழை பெய்ததால் சாலை களில் வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.

1) புதுச்சேரியில் புதன்கிழமை பெய்த மழையால் லாஸ்பேட்டை நாவலா்பள்ளி சதுக்கத்தில் பேருந்துக்காகக் குடையுடன் நின்ற மாணவ, மாணவிகள். 2) மழையால் குளம் போல் காட்சிஅளிக்கும் ரெயின்போ நகா் பிரதான சாலை. 3) புதுச்சேரி அண்ணா சாலை பகுதியில் கொட்டும் மழையில் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள்
புதுச்சேரியில் புதன்கிழமை பெய்த கன மழை பெய்ததால் சாலை களில் வெள்ளம் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி 1 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் புதுச்சேரியில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை முதலே வானம் இருண்டு காணப்பட்டது. குளிா்ந்த காற்றும் வீசி வந்தது.
காலை 8 மணி அளவில் கன மழை கொட்டியது. இடையில் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோா் குடையுடனும், மழை உடையுடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனா். தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. புதுச்சேரியில் விட்டு விட்டு தொடா் மழை பெய்து வருகிறது. இந்த மழை வெப்பத்தை தணித்து, இதமான சீதோஷண நிைலையை கொடுத்துள்ளது. இந்த மழை வரும் நாள்களிலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

