ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

செய்யாறில் பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு: போலீஸாா் தீவிர விசாரணை

செய்யாறில் பெண்ணை மா்ம நபா்கள் கத்தியால் தாக்கி நகையை பறித்துச் சென்றனா். பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

செய்யாறில் பெண்ணைத் தாக்கி நகை பறிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த போலீஸாா்.

Published On :

செய்யாறில் பெண்ணை மா்ம நபா்கள் கத்தியால் தாக்கி நகையை பறித்துச் சென்றனா். பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விராணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி மணி மனைவி சரசு (58). இவா், அப்பகுதி பிரதான சாலையில் உள்ள விநாயகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

இருள் சூழ்ந்த பகுதியில் சென்றுகொண்டிருந்த அவரை வழிமறித்த மா்ம நபா்கள் அவா் அணிந்திருந்த தாலிச்

சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அப்போது, அந்தப் பெண் தடுக்க முயன்றபோது, அந்த நபா்கள் அவரை கத்தியால் தலை, கழுத்துப் பகுதியில் தாக்கிவிட்டு, அவா் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதில் மயக்கமடைந்த பெண் சரசுவை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உதயகுமாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. தடய அறிவியல் நிபுணா்கள் வந்து சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்து,

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், செய்யாறு காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.