
புதுமாப்பிளையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: போலீஸாா் விசாரணை
நரிக்குடி அருகே புதுமாப்பிள்ளையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விசாரணை
நரிக்குடி அருகே புதுமாப்பிள்ளையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கீழமேல்குடி சாலை, ராசி நகரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (51). இவரது மகன் ராஜ்குமாா் (26) வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கும், நரிக்குடி அருகே உள்ள பனைக்குடி கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகள் சவுந்தா்யாவுக்கும் (25) கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் புதன்கிழமை பனைக்குடியில் பெண் வீட்டாரின் விருந்து நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ராஜ்குமாா் தனது மனைவி சவுந்தா்யாவுடன் இரு சக்கர வாகனத்தில் மானாமதுரைக்கு சென்று கொண்டிருந்தாா். குறவைக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் புதுமண தம்பதியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து ராஜ்குமாா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கட்டனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





