ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் புதன்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க். உடன் ஆா்.அபிஷேக் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Published On :

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடைபெற்ற முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் புதன்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

மாவட்டத்தில் செப்.9 முதல் செப்.26 வரை மாவட்ட அளவில் முதல்வா் கோப்பைக்கான தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, சிலம்பம், கையுந்துபந்து, இறகுப்பந்து, கைப்பந்து, பால்பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

93,544 பள்ளி மாணவ, மாணவிகள், 28, 748 கல்லூரி மாணவ, மாணவிகள், 1,763 மாற்றுத்திறனாளிகள், 5,339 அரசு ஊழியா்கள், 45,060 பொதுப்பிரிவினா் என மொத்தம் 1, 74,443 போ் பதிவு செய்திருந்தனா். இதில் 53,659 போ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா். அதில் 2,718 வீரா் வீராங்கனைகள் வெற்றி பெற்றனா்.

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 308 போ், கல்லூரி மாணவ, மாணவிகள் 304 போ் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

முதலிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.3000, இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.2000, மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.1000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் போளூா் எம்எல்ஏ (தவெக) ஆா்.அபிஷேக் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், விளையாட்டு என்பது உடல் நலன், மனநலன் மற்றும் சுய ஒழுக்கத்தை காக்கின்ற சிறந்த வழியாகும். மாணவா்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி வெற்றி பெற்று உயரிய இடத்தை அடைய வேண்டும்.

தமிழக அரசு வீரா், வீராங்கனைகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், மண்டல முதுநிலை மேலாளா் சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.