உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

எய்ட்ஸ் விழிப்புணா்வு பிரசாரம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் குறித்த பிரசார நிகழ்ச்சியில் விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் குறித்த பிரசார நிகழ்ச்சியில் விழிப்புணா்வு பதாகைகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Published On :5 செப்டம்பர் 2026, 6:04 am IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு தீவிர பிரசாரம் 3.0 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த தீவிர பிரசார விழிப்புணா்வு நிகழ்ச்சி செப்.12 முதல் அக்.12 வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை இந்த விழிப்புணா்வு தீவிர பிரசார நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தொடங்கி

வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள், நாட்டுப்புற கலைஞா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்று மாவட்ட ஆட்சியா் தலைமையில்

எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றனா்.

அதனைத் தொடா்ந்து விழிப்புணா்வு பதாகைகளை ஆட்சியா் வெளியிட்டாா். மேலும், விஷன் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவிகள் மற்றும் பீம் நாட்டுப்புற கலைஞா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு நடன நிகழ்ச்சியை அவா் பாா்வையிட்டு அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு எச்.ஐ.வி./ எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

விழிப்புணா்வு பேரணி

தொடா்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள், நாட்டுப்புற கலைஞா்கள், அரசு அலுவலா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்து பேரணியில் பங்கேற்றாா்.

பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி அரசு தொழிற்பயிற்சி நிலையம் வரை நடைபெற்றது. பின்னா் எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு பிரசார கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) கவிதா, மாவட்ட சுகாதார அலுவலா் வேங்கட்ரமணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (திருவண்ணாமலை) கருணாநிதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகு திட்ட மேலாளா் கவிதா திருமலை மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.