வேலூர், ஜூன் 13: வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் மட்டும் தினசரி 2 கோடி லிட்டர் (20 மில்லியன் லிட்டர்) மாசுபட்ட நீர் மற்றும் உணவகங்களின் கழிவு நீர் கலக்கிறது. இதனால், தொடர்ந்து பாழாகி வருகிறது பாலாறு.
இதைத் தடுக்க பொதுப் பணித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை, ஆர்க்காடு, சிப்காட் ஆகிய பகுதிகளில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவற்றையொட்டிய பகுதிகளில் சுமார் 100 காலணி தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
தோல் தொழிற்சாலைகளுக்குள் விலங்குகளின் தோல் நுழைந்தது முதல், அவை பதப்படுத்தப்பட்ட தோலாக வெளியே வரும் வரை 13 வகையான சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒவ்வொரு நிலையிலும் பல ரசாயனப் பொருள்கள் கலக்கப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட தோல் வெளியேறும்போது, சுமார் 1,000 வகையான ரசாயனங்கள் கலக்கப்பட்ட சாயக்கழிவு நீரும் ஆலையிலிருந்து வெளியேறுகிறது.
இத்தனை வகையான ரசாயனங்கள் கலந்த நீரைச் சுத்திகரிப்பு செய்வது என்பது இயலாத காரியமாகிறது. மாவட்டம் முழுதும் உள்ள ஆலைகளில் இருந்து தினசரி 20 மில்லியன் லிட்டர் மாசுபட்ட நீர் இவ்வாறு வெளியேறுகிறது. இவற்றை சுத்திகரிப்பு செய்ய 10 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடங்கள் உண்டு; ஆனால், அவற்றின் செயல்பாடு கேள்விக்குறியாகிறது.
இந்த அளவுக்கு கழிவு நீரை "சவ்வூடு பரவல் முறை' மூலம் சுத்திகரிக்க முடியாது. இதனால், தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் முற்றிலும் பாலாற்றிலேயே தஞ்சமடைகிறது.
ஏற்கெனவே மணல் அள்ளப்பட்டதால், பல இடங்களில் வறண்ட தரையோடு காட்சியளிக்கிறது பாலாறு. இந் நதி தொடர்ந்து மாசுபடுவதால், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரும் மாசடைந்துள்ளது.
நீரில் வரும் கழிவுகளைத் தடுத்து, நல்ல சுத்தமான நீரை நிலத்தடிக்கு அனுப்பும் பணியைச் செய்துவந்த மணல், முற்றிலும் அகற்றப்பட்டதால், பாலாற்றில் பாயும் கழிவு நீர், அப்படியே நிலத்துக்குள்ளும் செல்கிறது.
தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் மட்டுமின்றி, நகரின் கழிவு நீர் மொத்தமும் பாலாற்றில் கலக்கப்படுகிறது. இதனால், வறண்ட பாலாற்றின் பல இடங்களில் கழிவு நீர் மட்டுமே தேங்கியுள்ளது.
வேலூர் நகரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மொத்தமும், அருகேயுள்ள பாலாற்றில் கலக்கிறது. பஸ் நிலையத்திலிருந்து பாலாற்றுக்கு கழிவுநீர் செல்ல வசதியாக சாக்கடை கட்டப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட கழிவு நீர், பாலாற்றில் குளம் போலத் தேங்கியுள்ளது. பாலாற்றின் வழி நெடுக இதுபோல பல இடங்களில் கழிவு நீர் கலக்கின்றன. வீதிகளில் அள்ளப்படும் குப்பைகளும் இங்கு கொட்டப்பட்டு, தீவைத்து எரிக்கப்படுகின்றன.
"கழிவு நீரைத் திறந்து விட்டு, நதியை மாசுபடுத்துவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற தனது கருத்தை அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்.
அவரது சொந்த மாவட்டமான வேலூரில் பல இடங்களில் பாலாறு பாழாகிறது. அவரது தொகுதியிலேயே சாக்கடை நீர் ஆற்றில் கலக்கிறது. இதைத் தடுக்க பொதுப்பணித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

