மலையாள நடிகர் நிவின் பாலியின் “பிரதிச்சாயா” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ரசிகர்களைப் பெற்ற நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வெளியான புதிய படம் “பிரதிச்சாயா”. இப்படத்தை, இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
இசையமைப்பாளர் ஜஸ்டின் வர்கீஸ் இசையில் அரசியல் கதைக்களத்துடன் உருவான இப்படத்தில் நடிகர்கள் ஷர்ஃபுதீன், பாலச்சந்திர மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், “பிரதிச்சாயா” திரைப்படம் வரும் ஏப். 24 அன்று ஜியோ பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் இன்று (ஏப். 17) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, நடிகர் நிவின் பாலி - நடிகை ரியா ஷிபு நடிப்பில் கடந்த 2025 டிசம்பரில் வெளியான “சர்வம் மாயா” படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
The OTT release date for Malayalam actor Nivin Pauly's film "Prathichaya" has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








