தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட் பட முதல் பார்வை!

நடிகர் நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” பட முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :5 ஜூன் 2026, 9:46 pm IST

மலையாள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், சங்கீத் பிரதாப், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படம் “பிரேமலு”. இப்படம், மொழிகளைக் கடந்து பல கோடிகளை வசூல் செய்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மலையாளம், தமிழ்த் திரையுலகில் பெருமளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் “பெத்லகேம் குடும்ப யூனிட்” எனும் படத்தை கிரீஷ் ஏ.டி. இயக்குகிறார்.

நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிக்கின்றார்.

இந்த நிலையில், ”பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Summary

The first-look poster of the film "Bethlehem Kudumba Unit" starring Nivin Pauly has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.