அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!அண்ணாமலையின் இது நம்ம இயக்கம்! 7 லட்சத்தை எட்டுகிறது உறுப்பினர் எண்ணிக்கைகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பிரவீண் சக்ரவர்த்தி சந்திப்பு!நீங்கள் தமிழனா? இந்தியனா? மனக் குமுறலை வெளிப்படுத்திய அண்ணாமலை!தனி இயக்கம் தொடங்கினார் ரஜினிகாந்தின் மனைவி லதா!பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!
/

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படைப்பு! பாலன் தி பாய் பட டிரைலர்!

பாலன் தி பாய் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

News image

பாலன் தி பாய் டிரைலரில்...

Updated On :5 ஜூன் 2026, 7:32 pm IST

மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாலன் தி பாய்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிதம்பரம் இயக்கி நடிகர்கள் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படம் “மஞ்ஞுமல் பாய்ஸ்”. இப்படம், மொழிகளைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்றதுடன் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

இந்த நிலையில், இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் “பாலன் தி பாய்” எனும் புதிய படம் உருவாகியுள்ளது. நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான “ஆவேஷம்” பட இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்துக்கு கதை எழுதியுள்ளார்.

காவல் துறையிடம் இருந்து தப்பித்து வெவ்வேறு பெயர்களில் மறைந்து வாழும் 10 வயது சிறுவனையும் அவனது தாய்யையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “பாலன் தி பாய்” படத்தின் டிரைலர் இன்று (ஜூன் 5) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

கேவிஎன் புரொடெக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். மேலும், இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Summary

The trailer for the film "Balan the Boy," directed by Chidambaram has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.