காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நிவின் பாலியின் பெத்லகேம் குடும்ப யூனிட்! முதல் பாடல் வெளியீடு!

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

bethlehem kudumba unit

பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் போஸ்டர்...

Published On :

நடிகர் நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மலையாளம் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “பெத்லகேம் குடும்ப யூனிட்”. இப்படத்தை பிரேமலு பட இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கியுள்ளார்.

ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர்கள் மமிதா பைஜூ, ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள “பெத்லகேம் குடும்ப யூனிட்” படத்தின் "மாந்திரீகம்" எனும் முதல் பாடல் இன்று (ஜூலை 24) மாலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முன்னதாக, நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான “சர்வம் மாயா” படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The first song from actor Nivin Pauly's film "Bethlehem Kudumba Unit" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.