வேலூர், மே 27: வேலூரில் குடிசைத் தொழிலாகச் செய்யப்படும் பூந்துடைப்பம் தயாரிப்புத் தொழிலில் கட்டுப்படியாகும் விலையும் கிடைக்கவில்லை; அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரவில்லை.
வேலூர் நகரில் நேதாஜி விளையாட்டு அரங்கம் எதிரே உள்ள பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிசைத் தொழில் பூந்துடைப்பம் தயாரிப்பது. வீட்டில் உள்ள குழந்தைகளைத் தவிர்த்து, அனைவருமே இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.
தென்மாவட்டங்களில் இருந்து ஒரு லாரி லோடு ரூ.1 லட்சம் செலுத்தி ஒருவர் கொண்டுவரும் புற்களை, 10 பேர் பிரித்து வாங்கிக் கொள்கின்றனர். இவர்கள், சுமார் 80 முதல் 100 பேரிடம் கொடுத்து பூந்துடைப்பம் தயாரித்து பெறுகின்றனர். பூந்துடைப்பப் புற்களைக் கைப்பிடி அளவுக்குப் பிடித்து அவற்றைச் சீராக அடுக்கி, ஒரே அளவுக்கு அவற்றை வெட்டி, ஒரு துடைப்பத்தைத் தயாரிக்கின்றனர்.
இவ்வாறு 100 துடைப்பங்களைத் தயாரித்தால் மட்டுமே ரூ.30 கூலியாகக் கிடைக்கிறது. ஒரு நபரால் தினசரி 200 முதல் 300 துடைப்பங்கள் வரை செய்ய முடியும். இதன் மூலம் கிடைக்கும் ரூ.60 முதல் ரூ.90 வரையான வருவாய் போதாது என்பதால், தயாரித்த பூந்துடைப்பங்களை வியாபாரிகளிடம் வாங்கி, தலைச்சுமையாகவும், சைக்கிளிலும் கொண்டு சென்று வீதி வீதியாக விற்பனை செய்கின்றனர்.
ஒரு துடைப்பம் விற்பனை செய்வதால் கூடுதலாக ரூ.1 முதல் ரூ.2 வரை கிடைக்கிறது. 10 முதல் 20 துடைப்பங்கள் வரையே தினசரி விற்பனை செய்ய முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயுமே குடும்பச் செலவுகளுக்குச் சரியாக இருக்கிறது. துடைப்பம் தயாரிக்கும் கூலித் தொழிலாளர்களுக்குப் போதிய வருவாய் கிடைப்பதில்லை.
ஒரு பூந்துடைப்பம் ரூ.5-க்கு கிடைக்கிறது. அதை ரூ.6 முதல் ரூ.8 வரை சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர். மேலும், இங்கிருந்து ஆந்திரத்துக்கு துடைப்பங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்தும் வியாபாரிகள் நேரில் வந்து, துடைப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
ரூ.1 லட்சம் செலவு செய்து புற்களை வாங்கி, பூந்துடைப்பம் தயாரித்து விற்பதன் மூலம் ரூ.10 ஆயிரம் வரை மொத்த வியாபாரிக்கு லாபம் கிடைக்கிறது. இதற்கான பணத்தைக் கடனாகப் பெற்றே தொழில் செய்கின்றனர். கிடைக்கும் லாபத்தில், வட்டி செலுத்தவே பாதி தொகை செலவாகிறது. அடுத்த முறை புற்களை வாங்கவும், இவ்வாறு கடன் பெற வேண்டியதாகிறது. இதுவே இவர்களது வாழ்க்கையில் தொடர்கதையாகிப்போனது.
இதனால் இன்னமும் குடிசைகளிலேயே வசிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தீப்பிடித்ததில், பல லட்சம் மதிப்பிலான புற்கள் எரிந்து சாம்பலாயின. அந்த நஷ்டத்திலிருந்து மீண்டு வர இவர்களுக்குப் பல மாதங்களானது. கடந்த 50 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரை வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை.
"குடிசை வீடுகளிலும், சிமென்ட் தரைகளிலும் பயன்படுத்தப்படும் பூந்துடைப்பம், 10 ஆண்டுகளுக்கு முன்பு விற்ற விலையிலேயே இன்றும் விற்பனையாகிறது. மொசைக், மார்பிள் கற்கள் பதித்த வீடுகளில் பயன்படுத்த, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் புதிய வகை துடைப்பத்தாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொழிலில் ஈடுபட்டாலும், வாழ்க்கைத் தரம் ஏனோ உயரவில்லை. அதற்கான எவ்வித உதவிகளையும் செய்ய எவரும் இதுவரை முன்வரவில்லை' என்கின்றனர் பூந்துடைப்பம் தயாரிக்கும் குடிசைவாசிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

