தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடம் திறக்கப்படுமா?

ஆம்பூரில் தற்போது இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் இடநெருக்கடியில் சிக்கி இருப்பதால், மிகுந்த சிரமத்தை அதிகாரிகளும் மக்களும் சந்தித்து

Updated On :3 நவம்பர் 2015, 6:49 pm

ஆம்பூரில் தற்போது இயங்கி வரும் வட்டாட்சியர் அலுவலகம் இடநெருக்கடியில் சிக்கி இருப்பதால், மிகுந்த சிரமத்தை அதிகாரிகளும் மக்களும் சந்தித்து வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக்  கட்டடம் எப்போது திறக்கப்படும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

 ஆம்பூரில் கடந்த 2009-ஆம் ஆண்டு வட்டாட்சியர் அலுவலகம் தொடக்கப்பட்டது.  அப்போது தாற்காலிகமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ அலுவலரின் குடியிருப்பில் வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது.  இது பழைமையானதும், சிறியதுமான  கட்டடமாக இருந்ததால் போதிய இடவசதி இன்றி வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது.  புதிய கட்டடம் கட்டுவதற்கு அங்கு போதிய இடவசதி இல்லை.

வட்டாட்சியரின் அறை கூட மிகவும் சிறியதாகவே இருந்தது.   முக்கிய கூட்டங்கள் நடத்தக்கூட அங்கு அரங்கு இல்லாத நிலை நிலவியது.

மேலும் மணல் கடத்தும் மாட்டு வண்டிகள், லாரிகள், டிராக்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமல்லாது அலுவலகம் இயங்கி வரும் சாலை, அதற்கு அருகில் உள்ள தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  அதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

  வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தக் கூட அலுவலக வளாகத்தில் இடமில்லை. 

 சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக அதிகாரிகளை சந்திக்க வரும் மக்கள் காத்திருக்கக் கூட காத்திருப்போர் அரங்கு இல்லை.  அங்கு மக்கள் அமர ஓரிரு இருக்கைகள் தான் போடப்பட்டுள்ளன.  இருக்கைகள் போடக்கூட இடமில்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அதிகாரிகளும், மக்களும் சந்திக்க பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதையடுத்து, தமிழக அரசு ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய இடத்தைத் தேர்வு செய்து புதிய கட்டடம் கட்ட உத்தரவிட்டது.

 அதன்படி ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ரூ. 2 கோடி செலவில் போதிய இடவசதியுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கானப் பணிகள் தொடக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய கட்டடம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடக்கின்றது.

தற்போதைய வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாமல் அதிகாரிகளும், மக்களும் சிரமத்தைச்  சந்தித்து வருவதால் உடனடியாக புதிய கட்டடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்க நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று மக்களும் எதிர்பார்க்

கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.