திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மழை வருமுன் காக்கப்படுமா நீர்நிலைகள்?

அரக்கோணம் நகரம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. மழைக் காலம் தொடங்கும் முன் இவற்றில் நீரை தேக்கி வைக்கும் வகையில், சீரமைக்க அரசுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News image
Updated On :20 செப்டம்பர் 2015, 6:33 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம் நகரம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. மழைக் காலம் தொடங்கும் முன் இவற்றில் நீரை தேக்கி வைக்கும் வகையில், சீரமைக்க அரசுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், மழைநீரை தேக்கி வைத்துக்கொண்டால் மட்டுமே நாம் வரும் கோடையை ஒரளவுக்காவது சமாளிக்க இயலும். தனியார் அவர்களது இடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி உள்ளிட்ட சேகரிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, நீரை சேமிக்கின்றனர். இருப்பினும், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேகரிக்கப்படும் நீர்தான் நிலத்தடி நீர் உயர ஆதாரமாக உள்ளது.

ஏரிகளில் தண்ணீர் நிரம்பினாலும் பலனில்லாத நிலை!

ஏரிகளில் மண் எடுப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக அள்ளுகின்றனர். இதில் தேங்க போகும் நீர் பயன்பாட்டுக்கு உதவாது. ஏரி நிரம்பி மடை திறக்கப்பட்டாலும், பள்ளத்தில் இருக்கும் நீர் வெளியேறாது.

மேலும் பல கிராமங்களிலும் ஏரிக்கு நீர் வரும் கால்வாய்கள் முள்செடிகள் வளர்ந்து, அடைப்புக்குள்ளாகி இருக்கிறது.

இதனால் பல கிராம ஏரி கால்வாய்களில் நீர் அதனுள் செல்லாமல் சாலைகளிலும் அருகில்உள்ள நிலங்களிலுமே தேங்கிவிடுகிறது.

அரக்கோணம் வட்டத்தை பொருத்தவரை அனைத்து கிராமங்களிலுமே ஏரிகள் உள்ளன. இந்த வட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் ஏரிதான் வட மாவட்டங்களில் பெரிய ஏரியாகும். இந்த ஏரியை அடுத்து அதன் கீழ்ப்பகுதிகள் பல ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகள் அனைத்துமே மழைக்காலத்தில் நீரை தேக்கி வைக்குமளவு பராமரிக்கப்பட்டாலே அரக்கோணம் வட்டம் கோடையை சமாளித்து விடும்.

பராமரிப்பின்றி குளங்கள்!

அரக்கோணம் வட்டத்தில் உள்ள 58 கிராமங்களில் குளங்கள் உள்ளன. ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் குளங்களில் உள்ள செடிகளை அகற்றி, சுற்றுச்சுவரை மேம்படுத்தி பாதுகாத்து வைத்தால் மழைநீர் பெருமளவு நிரம்பும்.

இந்த வட்டத்தில் உள்ள செம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட குருவராஜபேட்டை, பெருமூச்சி, வளர்புரம், அரக்கோணம் நகரில் உள்ள உப்புகுளம் உள்ள பல குளங்கள் பராமரிப்பின்றி உள்ளன. இவைகளை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திலாவது இந்த நீர்நிலைகள் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தப்பட்ட வேண்டும்.

அப்போதுதான் மழைக்காலத்தில் மழைநீர் தேக்கப்பட்டு, கோடையில் தண்ணீர் பற்றாக்குறை தீரும். மழைநீரை சேமிக்கவும், இதற்காக நீர்நிலைகளை சுத்தம் செய்யவும் உள்ளாட்சி அமைப்புகளின் பொதுநிதியில் இருந்து நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள அவற்றுக்கு அதிகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு மேற்கொண்டால் குடிநீர் பற்றாக்குறை தீரும். வறட்சியான மாவட்டமான வேலூரில் மழைநீரை உரிய முறையில் சேகரித்தால், குடிநீர் பிரச்னை தீரும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.