ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
அரக்கோணம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் அரக்கோணத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.


அரக்கோணம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் அரக்கோணத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரக்கோணம் சுவால்பேட்டை சுந்தரவிநாயகர் கோயிலில் நகர தமாகா சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜை நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் கே.வி.ரவிசந்திரன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் ஆர்.அரிதாஸ், மாவட்ட நிர்வாகி வி.மகாலிங்கம், மாநில பொதுக் குழு உறுப்பினர் மோகன்காந்தி, இளைஞரணி மாநிலச் செயலாளர் தரணி, நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் பி. உத்தமன், நிர்வாகிகள் எ.எஸ்.சுபாஷ்வாசன், பாலகிருஷ்ணன், உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவர் சாந்தகுமாரிபாபு தலைமை வகித்து, மருத்துவமனையின் உள்நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பழம் ஆகியவற்றை வழங்கினார். ஒன்றியத் தலைவர்கள் (கிழக்கு) தேவேந்திரன், (மேற்கு) முனுசாமி, எம்.ரவி, நவநீதம், மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...