ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் "தூய பணம்' விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசுக்கு மக்கள் வரிப் பணம் செலுத்துவதை வலியுறுத்தி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியில் முதல்வர் பி.எம். ஆதில் அஹமத் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சஞ்சீவ்குமார் வரவேற்றார்.
ஆங்கிலத் துறைத் தலைவர் ஷபீ அஹமத் கான் வரி செலுத்துவதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். பொருளாதாரத் துறைப் பேராசிரியை ஆரிபா பேகம் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பேராசிரியர்கள் முஹம்மத் யூனுஸ், முஹம்மத் அபுபக்கர், முஹம்மத் ஜாபர், சுஹேய்ல் அஹமத், உஜேபா ராஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.