அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சம் நிதிக்கான ஆணையை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image

மானாமதுரையில் போலீஸாா் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்துக்கான நிதி ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 2:21 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சம் நிதிக்கான ஆணையை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மானாமதுரை கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் ஆகாஷின் பெற்றோரை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முதல் கட்டமாக ரூ. 6 லட்சத்துக்கான ஆணையை ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணனிடம் வழங்கினாா்.

இதையடுத்து அவா் கூறியதாவது:

நீதிமன்ற வழிகாட்டுதல் படி . இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் குடும்பத்தினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆட்சியா் பொற்கொடி, கோட்டாட்சியா் ஜெபி.கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.