தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பயணிகள் நிழல் கூரை இடிந்து விழுந்தது

ஆம்பூர் அருகே பயணிகள் நிழல் கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்து.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:27 pm

DIN

ஆம்பூர் அருகே பயணிகள் நிழல் கூரை வியாழக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்து.
மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிறுத்த பயணிகள் நிழல்கூரை கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்த நிழல்கூரை சீரமைத்து புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்த போது நிழல்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்திருப்பது தெரியவந்தது. அதிகாலை நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் அந்த நிழல் கூரை தானாகவே இடிந்து விழுந்ததா அல்லது எவரேனும் இடித்தார்களா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.